ஆறுமுகநேரியில் கிறிஸ்தவர்கள் அமைதி ஊர்வலம்

ஆறுமுகநேரியில் கிறிஸ்தவர்கள் அமைதி ஊர்வலம் நடத்தினர்.;

Update:2023-07-03 00:15 IST

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி மடத்துவிளை புனித சவேரியார் ஆலயத்தில் நேற்று காலையில் மணிப்பூர் மாநிலத்தில் நிலவும் கலவரங்கள் முடிவுக்கு வரவும், அங்கு மக்கள் அமைதியாக வாழவும், அமைதி திரும்பவும் வேண்டி சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை நடைபெற்றது. திருப்பலி நிறைவேறிய பின் பங்கு தந்தை அலாசியஸ் அடிகளார் தலைமையில் மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டி அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

இதில் அருட் சகோதரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். ஆலயம் முன்பு புறப்பட்ட ஊர்வலம் முக்கிய தெருக்கள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை சென்றடைந்தது.

தொடர்ந்து மணிப்பூர் மாநிலத்தில் கலவரங்கள் ஓய்ந்து மக்கள் சமாதானமாக ஒற்றுமையாக வாழ பங்குத்தந்தை பிரார்த்தனை செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்