பண்ருட்டி அருகே தாய், மகன் மீது தாக்குதல் 2 பேர் மீது வழக்கு

பண்ருட்டி அருகே தாய், மகனை தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;

Update:2022-11-26 00:15 IST


பண்ருட்டி, 

பண்ருட்டி அருகே உள்ள மேல்குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 45). இவரது மனைவி புஷ்பாவும்(40), மகன் விஷ்ணுவும்(20) விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஏ.கே.பாளையத்தை சேர்ந்த கலியமூர்த்தி(53), இவரது மகன் கலியவரதன்(33) ஆகியோர் முன்விரோதம் காரணமாக புஷ்பாவை திட்டி, தாக்கினர். இதை தடுத்த விஷ்ணுவுக்கும் அடி விழுந்தது. இது குறித்த புகாரின் பேரில் கலியமூர்த்தி, கலியவரதன் ஆகியோர் மீது பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்