இளம்பெண் மீது தாக்குதல்; கணவர்-மாமியார் உள்பட 4 பேர் மீது வழக்கு

ஏர்வாடி அருகே இளம்பெண் மீது தாக்குதல் நடத்தியதாக கணவர்-மாமியார் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;

Update:2023-10-09 01:22 IST

ஏர்வாடி:

திருக்குறுங்குடியை அடுத்த தளவாய்புரம் யாதவர் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் முத்துகிருஷ்ணன் (வயது 30). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சீதாலட்சுமி (26). கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று முத்துகிருஷ்ணன் மாடு வாங்குவதற்கு தாலி செயினை தருமாறு மனைவியிடம் கேட்டு தகராறு செய்தார்.

பின்னர் முத்துகிருஷ்ணனின் தாயார் லட்சுமி, சகோதரர் செல்வம், இவருடைய மனைவி உமா ஆகியோரது தூண்டுதலின்பேரில், சீதாலட்சுமியை முத்துகிருஷ்ணன் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சீதாலட்சுமி வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில், முத்துகிருஷ்ணன், லட்சுமி, செல்வம், உமா ஆகிய 4 பேர் மீது திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்