எட்டயபுரத்தில் விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்க கூட்டம்

எட்டயபுரத்தில் விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்க கூட்டம் நடந்தது.;

Update:2023-10-12 00:15 IST

எட்டயபுரம்:

எட்டயபுரத்தில் விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்ககூட்டம் சங்க கட்டிடத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தொழிற்சங்க பேரவை தலைவர் சங்கரலிங்கம் தலைமை தாங்கினார். நகரத் தலைவர் மாலையப்பன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டம் கொண்டு வந்த பிரதமருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பொற்கொல்லர்கள் தங்க வேலை, தாலி, திருமாங்கல்யம் செய்ய அரசாணை வெளியிட்டது போல் தமிழக அரசும் அரசாணை வெளியிட வேண்டும். எட்டயபுரத்தை தலைமையிடமாக கொண்டு தனி யூனியன் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் தங்க மாரியப்பன், முருகேசன், வெங்கடேசன், பரமசிவம், உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்