சத்தியமங்கலம் கூட்டுறவு சங்கத்தில் ரூ.14 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

சத்தியமங்கலம் கூட்டுறவு சங்கத்தில் ரூ.14 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.;

Update:2023-09-22 05:41 IST

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 967 மூட்டைகளில் பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.6 ஆயிரத்து 480-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 60-க்கும் என மொத்தம் ரூ.13 லட்சத்து 98 ஆயிரத்து 736-க்கு விற்பனை ஆனது. திருப்பூர், அவினாசி, கோவை, கோபி, சத்தியமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் இங்கு வந்து பருத்தியை வாங்கி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்