கலெக்டர் வீட்டு முன்பு என்ஜினீயர் தீக்குளிக்க முயற்சி

கலெக்டர் வீட்டு முன்பு என்ஜினீயர் தீக்குளிக்க முயற்சி செய்தார்.;

Update:2023-03-20 00:15 IST


சிவகங்கை சிவன் கோவில் தெற்கு தெருவை சேர்ந்தவர் மாரி(வயது 26). சிவில் என்ஜினீயர். இவருக்கு காவ்யா (23) என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். மாரியை நேற்று பஸ் நிலைய பகுதியில் வைத்து செந்தில் என்பவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த மாரி தன் மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் சிவகங்கை கலெக்டரின் வீட்டு முன்பாக உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்த அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்