பெண் தீக்குளிக்க முயற்சி

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2023-05-15 22:27 IST

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிலையில் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வந்த ஒரு பெண் உடலில் மண்எண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் காரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த கஸ்தூரி என தெரிய வந்தது. கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்து விட்டதாகவும், 27 வயதில் மாற்றுத்திறனாளி மகன் இருப்பதாகவும், விபத்து இழப்பீட்டு தொகையை காலதாமதம் இன்றி வழங்க கோரி தீக்குளிப்பு முயன்றதாகவும் அவர் தெரிவித்தார். இது குறித்து தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்