அரக்கோணத்திற்கு வந்த ஆஸ்திரேலிய கடல்சார் ரோந்து விமானம்

கூட்டுப் பயிற்சிக்காக ஆஸ்திரேலிய கடல்சார் ரோந்து விமானம் அரக்கோணத்திற்கு வந்தது.;

Update:2023-07-01 23:34 IST

ராணிப்பேட்டை,

ஆஸ்திரேலியாவில் இருந்து ராணுவ கடல்சார் பி8ஏ ரோந்து மற்றும் உளவு விமானம் இந்திய கடற்படையின் பி8ஐ விமானத்துடன் கூட்டுப் பயிற்சி மேற்கொள்வதற்காக அரக்கோணம் கடற்படை விமான தளமான ஐ.என்.எஸ். ராஜாளிக்கு வந்தது. இந்திய கடற்படை மற்றும் ஆஸ்திரேலிய பாதுகாப்பு படைகளுக்கு இடையே பணி திட்டமிடல், பணியாளர்கள் தொடர்புகள் மற்றும் நடைமுறைகளை பகிர்ந்து இயங்குவது மற்றும் கூட்டுத்தன்மையை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை இந்தப் பிரிவினர் வழங்குவர்.

Tags:    

மேலும் செய்திகள்