கடற்கரையில் தூய்மைப்பணி

தரங்கம்பாடி கடற்கரையில் தூய்மைப்பணி நடந்தது. இதில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Update: 2023-01-13 18:45 GMT

பொறையாறு:

தரங்கம்பாடி கடற்கரையில் தூய்மைப்பணி நடந்தது. இதில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

தூய்மைப்பணி

தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மற்றும் வனத்துறையால் தொடங்கப்பட்ட இந்தோ-ஜெர்மன் சுற்றுச்சூழல் அமைப்புகளில் கடல் குப்பைகளை தடுக்கும் வகையில் சுற்றுச்சூழல் திட்டத்தின் கீழ் இந்தியாவில் கடற்கரை பகுதியில் தூய்மை பணி நடைபெற்று வருகிறது.

விதை மறுசுழற்சி இயக்கம் சார்பில் 2014-ம் ஆண்டு முதல் சென்னையில் குப்பைகளை தரம் பிரிப்பது அதன் விளைவு நன்மைகளை பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு அளித்து வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் கடற்கரையில் தூய்மை பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா உத்தரவுபடி பூம்புகார் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. ஆலோசனை பேரில் தரங்கம்பாடி கடற்கரையில் தூய்மைப் பணி நடைபெற்றது. இந்தநிகழ்ச்சிக்கு தரங்கை போர்டு சென்டினியல் லயன்ஸ் சங்க தலைவர் ஏ.சக்திவேல் தலைமை தாங்கினார், செயலாளர் எம்.கலியபெருமாள், பொருளாளர் டி.விஜயபாலன், முன்னாள் லயன்ஸ் சங்க தலைவர் ஜெ.மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹோப்பவுண்டேஷன் மண்டல இயக்குனர் சாமுவேல் தாமஸ் வரவேற்றாா்.

மாணவ-மாணவிகள் பங்கேற்பு

இதில் தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி குமரவேல், துணைத்தலைவர்பொன்.ராஜேந்திரன், மயிலாடுதுறை மாவட்ட தரங்கம்பாடி தலைமை மீனவ கிராம பஞ்சாயத்தார்கள், புனித தெரசா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் காமராசன், புனித தெரசா கல்லூரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செசிலி, ஜான்சன் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சைமன் ஆகியோர் பேசினர்.

நிகழ்ச்சியில் 400-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை கடற்கரை பகுதியை தூய்மைபடுத்தினர். இதில் சுற்றுலா பயணிகள் கடற்கரையில் விட்டுசென்ற பிளாஸ்டிக் பாட்டில் உள்ளிட்ட 900 கிலோ குப்பைகளை சேகரித்து அகற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்