செங்குட்டைபாளையம்-மூட்டாம்பாளையம் இடையே தரைமட்ட பாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்-வாகன ஓட்டிகள் கோரிக்கை
செங்குட்டைபாளையம்-மூட்டாம்பாளையம் இடையே தரைமட்ட பாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்-வாகன ஓட்டிகள் கோரிக்கை;
நெகமம்
கிணத்துக்கடவு ஒன்றியத்திற்கு உட்பட்ட செங்குட்டை பாளையத்தில் இருந்து மூட்டாம்பாளையத்துக்கு சாலை செல்கிறது. இந்த வழியாக தினமும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையின் குறுக்கே ஓடை செல்வதோடு, அங்கு தரைமட்ட பாலம் உள்ளது. அதன் இருபுறமும் தடுப்புகள் இல்லாததால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் அப்பகுதியை கடந்து சென்று வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அங்கு மின் விளக்குகள் இல்லாததால், இரவில் கும்மிருட்டாக காணப்படுகிறது. மேலும் கால்நடைகள் கூட்டமாக வருவதால், தவறி ஓடைக்கும் விழும் நிலை உள்ளது. எனவே, தரைமட்ட பாலத்தையொட்டி இருபுறமும் தடுப்புச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.