பக்தி கணபதி கோவில் கும்பாபிஷேக விழா

பக்தி கணபதி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

Update: 2023-02-06 07:24 GMT

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட ராகவேந்திரா நகரில் புதியதாக பக்தி கணபதி கோவில் கட்டப்பட்டு பரிவார தெய்வங்கள் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, துர்க்கை, நவகிரகங்கள், மூலவர் பக்தி கணபதிக்கு கும்பாபிஷேக விழா நேற்று காலை நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பரிவார தெய்வங்கள், மூலவர் பக்தி கணபதிக்கு சிறப்பு பூஜைகள், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் காயரம்பேடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருவாக்கு, காயரம்பேடு ஊராட்சி மன்ற 1-வது வார்டு உறுப்பினர் ஆர்.சொக்கலிங்கம், கோவில் நிர்வாகிகள் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    
Show comments

மேலும் செய்திகள்