ரூ.14 லட்சத்தில் ரேஷன் கடை கட்ட பூமிபூஜை
அரக்கோணம் வின்டர்பேட்டையில்ரூ.14 லட்சத்தில் ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜையை சு.ரவி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.;
அரக்கோணம் வின்டர்பேட்டை சிவபாதம் நகரில் ரேஷன் கடை அமைத்துத் தர வேண்டி அப்பகுதி மக்கள் சு.ரவி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.14 லட்சத்து 8 ஆயிரம் ஒதுக்கீ்டு செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சு.ரவி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். அ.தி.மு.க. நகர செயலாளர் கே.பி.பாண்டுரங்கன், வார்டு உறுப்பினர்கள் நரசிம்மன், சரவணன், ஜெர்ரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.