அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி சார்பில் சைக்கிள் பேரணி

வந்தவாசியில் அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி சார்பில் சைக்கிள் பேரணி;

Update:2022-06-11 18:32 IST

வந்தவாசி, ஜூன்.12-

உலக மிதிவண்டி தினத்தையொட்டி வந்தவாசியில் அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் சைக்கிள் பேரணி நடந்தது.

இந்த பேரணியை கல்லூரி நிறுவனர் பி.முனிரத்தினம் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் எஸ்.ருக்மணி, கல்லூரி செயலர் எம்.ரமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகரின் முக்கிய வீதிகளில் சைக்கிள் பேரணி சென்றது.

இதில் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் டி.பாரதி, ஏ.கலைவாணி மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்