இருதரப்பினர் மோதல்; பெண்கள் உள்பட 4 பேர் காயம்

இருதரப்பினர் மோதலில் பெண்கள் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.;

Update:2023-07-31 01:30 IST

ஏர்வாடி:

திருக்குறுங்குடி அருகே உள்ள ஆவரந்தலை மேலத்தெருவை சேர்ந்தவர் பாண்டித்துரை மனைவி அன்னக்கிளி என்ற லெட்சுமி (வயது 58). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி செல்வ அரசிக்கும் (53) இடையே இடப்பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று செல்வ அரசி பிரச்சினைக்குரிய இடத்தில் சாணம் தட்டியதாக கூறப்படுகிறது. இதனை அன்னக்கிளி தட்டிக் கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, மோதல் உருவானது. செல்வ அரசி, அவரது கணவர் கிருஷ்ணன் (61), மகன் மார்ஸ் நிக்ஸ் கோல்டன் (27) ஆகியோர் சேர்ந்து அன்னக்கிளியை தாக்கியதாகவும், அதனை தடுக்க வந்த அவரது மகன்கள் ராபின் (36), சுபின் (31) ஆகியோரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபோல அன்னக்கிளி, அவரது மகன்கள் சேர்ந்து செல்வ அரசியை கம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றி இரு தரப்பினரும் திருக்குறுங்குடி போலீசில் தனித்தனியாக புகார் செய்தனர். போலீசார் இதுதொடர்பாக இருதரப்பையும் சேர்ந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்