#லைவ் : திரவுபதி முர்மு முதலில் எடப்பாடி பழனிசாமி உடன்.. பிறகு ஓ.பன்னீர் செல்வமுடன் தனித்தனியே சந்திப்பு..!

ஆதரவு திரட்ட பா.ஜ.க கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு சென்னை வருகை வந்துள்ளார்.

Update: 2022-07-02 10:54 GMT

சென்னை

ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு சென்னை வருகை வந்துள்ளார். அ.தி.மு.க. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோருகிறார். நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் திரவுபதி முர்மு ஆதரவு திரட்டுகிறார்.

Live Updates
2022-07-02 12:24 GMT

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-

திரவுபதி முர்முவை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளோம். திரவுபதி முர்மு நிச்சயம் வெற்றிபெற வேண்டும்.

பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்மு வெற்றிபெற வேண்டும்.

2022-07-02 12:21 GMT

அ.தி.மு.க சட்டவிதிப்படி தற்போது வரை நான் தான் ஒருங்கிணைப்பாளர்- ஓ.பன்னீர் செல்வம்

எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மேடையில் இருந்து சென்ற பிறகு, திரவுபதி முர்முவை சந்தித்து ஆதரவு தெரிவித்தார் ஓ.பன்னீர்செல்வம்

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:-

திரவுபதி முர்முவை சந்தித்து அ.தி.மு.க. சார்பில் ஆதரவு தெரிவித்துள்ளோம். அ.தி.மு.க சட்டவிதிப்படி தற்போது வரை நான் தான் ஒருங்கிணைப்பாளர் என கூறினார்.

2022-07-02 12:04 GMT

எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மேடையில் இருந்து சென்ற பிறகு, திரவுபதி முர்முவை சந்தித்து ஆதரவு தெரிவித்தார் ஓ.பன்னீர்செல்வம்! 

2022-07-02 12:01 GMT

நிகழ்ச்சி முடிந்ததும் நிருபர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

தொண்டர்களின் எண்ணமே பொதுக்குழுவில் எதிரொலித்தது. அ.தி.மு.க.வின் தற்போதைய நிலைக்கு, தொண்டர்களின் மனஉளைச்சலுக்கு ஓ.பன்னீர் செல்வம் தான் காரணம். 

2022-07-02 12:00 GMT

நிகழ்ச்சியில் பேசிய திரவுபதி முர்மு பேசும் போது கூறியதாவது:-

நாட்டின் சுதந்திரத்தில் தமிழ்நாடும், தமிழ்நாட்டு வீரர்களும் முக்கிய பங்கு வகித்தனர். என்னை உங்கள் சகோதரியாக எண்ணி, ஆதரவளித்து என்னை வெற்றி பெற வைக்க வேண்டும்

வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நாட்டிற்கு நாட்டிற்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.கனியன் பூங்குன்றனாரின்யாது ஊரே யாவரும் கேளிர் என்பதை குறிப்பிட்டு முர்மு உரையாற்றினார்.

2022-07-02 11:36 GMT

எதிர்கட்சி தலைவர் திரவுபதி முர்முவை ஆதரித்து பேசும் போது கூறியதாவது:-

பழங்குடியினரான திரவுபதி முர்முவை ஆதரிக்காமல் சமூக நீதி, திராவிட மாடல் என்று ஏமாற்றி வருகிறார் மு.க.ஸ்டாலின். அ.தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் திரவுபதி  முர்முக்கு முழுமையாக ஆதரவளிப்பார்கள்.பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவரை வேட்பாளராக அறிவித்த பிரதமருக்கு நன்றி  என கூறினார்.

2022-07-02 11:21 GMT

சென்னை வந்த திரெளபதி முர்மு-க்கு எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து வரவேற்றார்.

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆதரவு கோரினார், பா.ஜ.க. கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு

தனது ஆதரவு எம்.பி, எம்.எல்.ஏக்களுடன் தனி அறையில் அமர்ந்து உள்ளார் ஓ.பன்னீர் செல்வம்

Tags:    

மேலும் செய்திகள்