நாடாளுமன்ற தேர்தல்: பா.ம.க. போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

Update: 2024-03-21 16:45 GMT

சென்னை,

தமிழகத்தில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில், பா.ம.க 10 தொகுதிகள், தமிழ் மாநில காங்கிரஸ் 3 தொகுதிகள், டி.டி.வி தினகரனுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. போட்டியிடும் 10 தொகுதிகளின் விவரங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, பா.ம.க. காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்