பா.ஜ.க. பிரமுகர் கைது

முதல்-அமைச்சர் குறித்து அவதூறு பரப்பிய பா.ஜ.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-10-08 19:45 GMT
பொள்ளாச்சி முத்துக்குமாரசாமி லே -அவுட்டை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 36). இவர், கோவை தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சியின் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவராக உள்ளார். இவர், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக தெரிகிறது. இதுகுறித்து பொள்ளாச்சி குமரன் வீதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஆறுமுகசாமி என்பவர் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகவும், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியதாகவும் செல்வகுமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்