சேரன்மாதேவி:
சேரன்மாதேவி கிழக்கு ஒன்றிய பா.ஜ.க சார்பில், தி.மு.க. அரசை கண்டித்தும், விலைவாசி உயர்வை கண்டித்தும் சேரன்மாதேவி அருகே உள்ள கங்கனாங்குளத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளைத்தலைவர் நவீன் குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் சின்ன முருகன், விவசாய அணி மாவட்ட தலைவர் முருகன், ஒன்றிய சிறுபான்மையினர் அணி சாலமோன் ராஜா மற்றும் கிளைத்தலைவர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட சிறுபான்மையினர் அணி தலைவர் இசக்கார் ராஜபால் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதேபோல் கோபாலசமுத்திரத்தில் பா.ஜ.க.வினர் தக்காளி மாலை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒன்றிய பொதுச் செயலாளர் ராஜவேல் உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.