விருதுநகரில் பா.ஜ.க. ஆலோசனை கூட்டம்

விருதுநகரில் பா.ஜ.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;

Update:2023-10-09 01:27 IST


விருதுநகர் தனியார் திருமண அரங்கில் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல், பொதுச்செயலாளர் சீதாராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகரன் ஆகியோர் நாடாளுமன்ற தேர்தலுக்கான வழிமுறைகள் குறித்து பேசினர். இதில் மாவட்ட, மண்டல, பா.ஜ.க. நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் பிற அணி அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்