சேலத்தில் பா.ஜனதா ஆர்ப்பாட்டம்

சேலத்தில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-07-18 19:46 GMT

சேலம் மாநகர் மாவட்ட பா.ஜனதா பட்டியல் அணி சார்பில் பெரியார் பல்கலைக்கழகத்தை கண்டித்து சேலம் நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. பட்டியல் அணி மாநகர் மாவட்ட தலைவர் புகழேந்தி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் ஆறுமுகம் (மேற்கு), பாஸ்கர் (கிழக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக தேர்வில் சாதி குறித்து கேள்வி கேட்கப்பட்ட பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்