டாக்டரை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

டாக்டரை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update:2023-03-02 00:16 IST

கந்தர்வகோட்டையில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு சுமார் 36 ஊராட்சிகளில் இருந்தும் பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இப்பகுதியில் இரவு நேரங்களில் தனியார் மருத்துவமனைகள் அதிகம் இல்லாததால் அரசு மருத்துவமனையை நாடி பொதுமக்கள் அதிக அளவில் வருகின்றனர். மருத்துவமனையில், 24 மணி நேர சிகிச்சை பிரிவு இயங்கி வருகின்ற நிலையில் இங்கு இரவு நேரங்களில் பணியாற்றுகின்ற மருத்துவர்களும், செவிலியர்களும் வருகிற நோயாளிகளுக்கு உரிய பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்காமல் மாத்திரைகளை மட்டும் கொடுத்து காலையில் வந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் காலில் அடிபட்டு ரத்தம் வடிந்த நிலையில் கார்த்திக் என்பவர் சிகிச்சைக்காக வந்தபோது ஓ.பி. திறந்தவுடன் வந்து கட்டு போட்டுக்கொள்ளுங்கள் என்று இரவு நேர மருத்துவர் கூறியுள்ளார். மேலும் அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கவில்லை. இதனால் கார்த்திக் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து கொண்டார். இதுகுறித்து கந்தர்வகோட்டை ஒன்றிய பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் தவமணி மருத்துவரிடம் கேட்டதற்கு மருத்துவர் அலட்சியமாக பதில் கூறியிருக்கிறார். இதனை கண்டித்து கந்தர்வகோட்டை ஒன்றிய பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மருத்துவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். இல்லையேல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்