கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரத்ததான முகாம்

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.;

Update:2022-06-15 00:06 IST

உலக ரத்ததான தினத்தையொட்டி கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேற்று ரத்ததானம் வழங்கி, முகாமினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ரத்த தானம் விழிப்புணர்வு குறித்த உறுதிமொழியினை கலெக்டர் தலைமையில் டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் எடுத்து கொண்டனர். மேலும், மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மூலம் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. பின்னர் ரத்ததானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், ரத்ததானம் செய்பவர்கள் பயன்படுத்தி கொள்ள ஏதுவாக GMCH, Karur Donar Club என்ற இணையதளத்தை கலெக்டர் தொடங்கி வைத்து, 76 முறை ரத்ததானம் அளித்த ராஜமாணிக்கம் என்பவரை பாராட்டி நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழை வழங்கினார். பின்னர், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் குறித்த பயிற்சியினை தொடங்கி வைத்து, மக்களைத் தேடி மருத்துவ பணியாளர்களுக்கு திட்டங்கள் குறித்து கருத்துரை வழங்கினார். இம்முகாமில், கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் முத்துச்செல்வன், இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) ஞானக்கண் பிரேம் நிவாஸ், துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) சந்தோஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்