பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பேருந்து டிரைவர் கைது

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி பேருந்து டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.;

Update:2025-12-19 07:10 IST

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகாவை சேர்ந்த 11 வயது சிறுமி, வேலூரில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி தினமும் அந்த பள்ளியின் பேருந்தில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். பேருந்தின் டிரைவரான குடியாத்தம் தாலுகா சாரக்குப்பத்தை சேர்ந்த தேவேந்திரன் (61 வயது) கடந்த சில நாட்களாக மாணவி மற்றும் அவரின் அருகில் இருக்கும் தோழிக்கு பேருந்தில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் இதுபற்றி தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக இதுகுறித்து பள்ளி நிர்வாகம் மற்றும் வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து தேவேந்திரனை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்