ரவணசமுத்திரம் நூலகத்திற்கு புத்தகங்கள்

கடையம் அருகே ரவணசமுத்திரம் நூலகத்திற்கு முன்னாள் அமைச்சர் பூங்கோதை புத்தகங்களை வழங்கினார்.;

Update:2023-03-28 00:15 IST

கடையம்:

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு கடையம் அருகே ரவண சமுத்திரம் நூலகத்திற்கு ஆலடி அருணா அறக்கட்டளை சார்பில் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பஞ்சாயத்து தலைவர் முகமது உசேன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் பூங்கோதை கலந்துகொண்டு ஆலடி அருணா அறக்கட்டளை சார்பில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை நூலகத்திற்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில் பஞ்சாயத்து துணைத் தலைவர் ராமலட்சுமி சங்கிலி பூதத்தார், பஞ்சாயத்து கவுன்சிலர்கள் கோமதி, முகமது யக்யா, ஜமீலா, ஊராட்சி செயலாளர் மாரியப்பன், வக்கீல் சிவகுமார், பஞ்சு அருணாச்சலம், ஆழ்வார்குறிச்சி கோதர்ஷா, இசக்கியப்பன், சமுதாய தலைவர் பரமசிவன், கடையம் நூலகர் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நூலகர் நடராஜன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்