பெட்டிக்கடைக்காரர், போக்சோ சட்டத்தில் கைது

பஸ்சில் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பெட்டிக்கடைக்காரரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-08-07 23:30 IST

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டையை அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தினமும் அரசு பஸ்சில் பள்ளிக்கு சென்று வந்தார். இந்த மாணவியை சங்கேந்தி சிவன் கோவில் தெருவில் பெட்டிக்கடை வைத்திருக்கும் முருகானந்தம்(வயது62) என்பவர் பின் தொடர்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து அந்த மாணவி பஸ்சில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அந்த பஸ்சில் வந்த முருகானந்தம், மாணவியிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதுதொடர்ந்து மாணவியின் தந்தை எடையூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன், சீமான் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்து திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்