தேர்தலுக்கு பின் அன்புமணி பூஜ்ஜியமாவார் - பாமக எம்.எல்.ஏ. அருள் கடும் தாக்கு

அன்புமணிக்கு பதவிகளை கொடுத்து அழகுபார்த்தவர் ராமதாஸ் என பாமக எம்.எல்.ஏ. அருள் கூறினார்.;

Update:2025-12-29 11:37 IST

சேலம்,

சேலத்தில் ராமதாஸ் தலைமையில் இன்று பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பாமக எம்.எல்.ஏ. அருள் கலந்துகொண்டு பேசியதாவது;

ராமதாஸ் போல ஒரு தந்தை யாருக்கும் கிடைக்க மாட்டார்கள். அன்புமணிக்கு பதவிகளை கொடுத்து அழகுபார்த்தவர் ராமதாஸ். பல சாதனைகள் செய்ய வேண்டுமென எம்.பி. பதவி கொடுத்து அழகுபார்த்தார். ஆனால், நீங்கள் ராமதாசை 3 ஆண்டுகளாக படுத்தும் பாடு இருக்கிறதே.. இது நியாயமா? தர்மமா?

அன்புமணி வழிகாட்டுவார் என நினைத்தோம். சின்னையா என்று கூறினோம். ஆனால் அவர் எங்கள் எண்ணத்தில் மண்ணை  அள்ளிப்போட்டுவிட்டார். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அப்பா, அம்மாவுக்கும் வயிறு எரிகிறது. எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும், எப்படி இருக்கக்கூடாது என்பதற்கும் உதாரணம் பாமக.

ஒட்டுமொத்த மக்களும் ராமதாசின் பின்னால் உள்ளனர். பாமக, ராமதாஸ் பின்னால் உள்ளது. அன்புமணிக்கு பின்னே போலிகளும், பொய்யர் கூட்டமும் மட்டுமே உள்ளது. 2026-ல் முதல்-அமைச்சர் யார் என்பதை முடிவுசெய்வது ராம்தாஸ்தான். தேர்தலுக்கு பின் அன்புமணி பூஜ்ஜியமாவார்.”

இவ்வாறு அவர் பேசினார்.  

Tags:    

மேலும் செய்திகள்