பிரம்மேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா

அரக்கோணம் அருகே பிரம்மேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

Update: 2022-12-11 16:47 GMT

அரக்கோணத்தை அடுத்த வேலூர் கிராமத்தில் 1747-ம் ஆண்டு நந்திவர்மனால் கட்டப்பட்ட பழமையான பிரம்ம வித்யாம்பிகை உடனுறை பிரம்மேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த 9-ந் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், மூர்த்தி ஹோமம், திசா ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனையுடன் பூஜைகள் நடை பெற்று வந்தது. நேற்று காலை யாகசாலை பூஜை நிறைவுற்று மேளதாளம் முழங்க புனித நீர் அடங்கிய கலசங்கள்ளுடன் கோவிலை சுற்றி வலம் வந்து அன்புச் செழியன் ஐயர் தலைமையில், திருத்தணி ராமமூர்த்தி சிவாச்சாரியார், கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்