இடிந்து விழும் நிலையில் கட்டிடங்கள்

பூதலூர் ஒன்றியத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்களை இடித்து அகற்ற வேண்டும் என மக்கள் அரசுக்கு கோாிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-10-11 21:09 GMT

திருக்காட்டுபள்ளி;

பூதலூர் ஒன்றியத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்களை இடித்து அகற்ற வேண்டும் என மக்கள் அரசுக்கு கோாிக்கை விடுத்துள்ளனர்.

பருவமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து பல்வேறு அறிவுரைகளை அரசு அதிகாரிகளுக்கு வழங்கி உள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள பயனற்ற நிலையில் உள்ள கட்டிடங்களை அகற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. பூதலூர் ஒன்றியத்தில் ஆபத்தான நிலையில் உள்ள பல்வேறு பள்ளி கட்டிடங்கள் இடித்து அகற்ற பட்டுள்ளன.இந்த நிலையில் திருக்காட்டுப்பள்ளியில் கால்நடை மருத்துவமனை கட்டிடம் பழுதடைந்து அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக இடிந்து விழுந்து வருகிறது. கூடநாணல் கிராமத்தில் துணை சுகாதார வளாகம் ஒன்று எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இடித்து அகற்ற கோரிக்கை

பூதலூர் அருகே உள்ள செல்லப்பன் பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் பயன்படுத்தப்படாத பொது கழிப்பறை ஒன்றை இடித்து அகற்ற வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.ஆபத்தான நிலையில் உள்ள திருக்காட்டுப்பள்ளி கால்நடை மருத்துவமனை கட்டிடம், கூடநாணல் துணை சுகாதார வளாக கட்டிடம், செல்லப்பன்பேட்டை உயர் நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பயன்பாட்டில் இல்லாத பொதுக்கழிப்பறை ஆகிய வற்றை இந்த வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பு இடித்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்