ஆவடி அருகே 3 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு

ஆவடி அருகே ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் வீடு உள்பட 3 வீடுகளின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் திருடிச்சென்றுவிட்டனர்.;

Update:2022-12-13 10:09 IST

ஆவடியை அடுத்த சேக்காடு கார்த்திக் நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் ராஜன் (வயது 71). ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியரான இவர், வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டார்.

அப்போது மர்மநபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைத்து இருந்த 22 பவுன் தங்க நகை, ரூ.88 ஆயிரத்தை திருடிச்சென்றுவிட்டனர்.

இதேபோல் அதே பகுதியில் வசிக்கும் அசோகன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து ஒரு செல்போன் மற்றும் ரூ.10 ஆயிரத்தையும், அதே பகுதியில் உள்ள அம்ஜித் என்பவரது வீட்டின்் வெளியே நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளையும் மர்மநபர்கள் திருடிச்சென்று விடடனர்.

அடுத்தடுத்து 3 வீடுகளில் நடந்த திருட்டு சம்பவம் குறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்