தொழில் ஊக்குவிப்பு சிறப்பு முகாம்

வட்டார அளவிலான தொழில் ஊக்குவிப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.

Update: 2022-11-24 18:45 GMT

இளையான்குடி, 

சிவகங்கை மாவட்ட தொழில் மையம் மூலம் வட்டார அளவிலான தொழில் ஊக்குவிப்பு சிறப்பு முகாம் இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தொழில் மையம் மூலம் கிடைக்கும் கடன்கள் மற்றும் மானியம் பற்றி மாவட்ட தொழில் மையம் (கிராம தொழில்கள் மற்றும் நிர்வாகம்) உதவி இயக்குனர் சக்திமாய் கலந்துகொண்டு எடுத்து கூறினார். இதில் மாநில ஊரக வாழ்வாதார திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கடன்கள் கோர தேவையான ஆவணங்கள் பற்றி ராஜேஷ் விளக்கம் அளித்தார். முகாமில் மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர் சுந்தரமூர்த்தி, ஊராட்சி ஒன்றிய நிர்வாக மேலாளர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர். வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்