கார்-ஆட்டோ மோதல்; டிரைவர் சாவு

கார்-ஆட்டோ மோதல்; டிரைவர் சாவு;

Update:2023-04-17 00:15 IST

கோவை

கோவை கணபதி சத்தி ரோட்டில் உள்ள அத்திப்பாளையம் பிரிவு சந்திப்பில் கார்-ஆட்டோ மோதிக்கொண்டன. இதில் ஆட்டோவை ஓட்டி வந்த மதுக்கரை காந்திநகரை சேர்ந்த ஸ்டீபன்(வயது 43) படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் காரை ஓட்டி வந்த கணபதி போலீஸ் குடியிருப்பை சேர்ந்த சார்லஸ் அந்தோணி(வயது 52) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்