பஸ் நிலையத்தில் தச்சு தொழிலாளி திடீர் சாவு

பஸ் நிலையத்தில் தச்சு தொழிலாளி திடீர் சாவு;

Update:2023-05-23 00:09 IST

ஸ்ரீவில்லிபுத்தூர்

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). இவர் தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். பாவூர்சத்திரத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வேலை விஷயமாக வந்துள்ளார். பஸ் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்தார். அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் இறந்து போனார். இதுகுறித்து அவரது மனைவி மீனாட்சி கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

Tags:    

மேலும் செய்திகள்