இருதரப்பினர் மோதல்; 11 பேர் மீது வழக்கு

பேரிகை அருகே இருதரப்பினர் மோதல் தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update:2023-03-09 00:15 IST

ஓசூர்

பேரிகை அருகே உள்ள புன்னாகரத்தைச் சேர்ந்தவர் கங்கப்பா (வயது 45). அதே பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் (52). இவர்களுக்கு முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று 2 தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதுதொடர்பாக இரு தரப்பினரும் பேரிகை போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் ஸ்ரீராம், ஆஞ்சப்பா (43), ரமேஷ் (40), பாலகிருஷ்ணன் (29), சீனிவாசன், கங்கப்பா, திம்மராயப்பா, அனிதா, சிவக்குமார், மாது, ஸ்ரீதர் ஆகிய 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்