ரூ.3½ லட்சம் மோசடி; ஊழியர் மீது வழக்கு
ரூ.3½ லட்சம் மோசடி செய்த ஊழியர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது;
காரைக்குடி,
காரைக்குடி கோவிலூர் சாலையில் மோட்டார் கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் நிறுவனம் உள்ளது. இங்கு எமனேஸ்வரத்தை சேர்ந்த முத்துக்குமார் (வயது 38) என்பவர் ஸ்டோர்கீப்பராக வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் அந்நிறுவனத்தில் நடைபெற்ற கணக்கு தணிக்கையில் உதிரி பாகங்கள் விற்ற வகையில் வரவாகியிருக்க வேண்டிய ரூ.3½ லட்சம் இருப்பு குறைவது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அந்நிறுவனத்தினர் விசாரணை மேற்கொண்டபோது பணத்தை முத்துக்குமார் வரவு வைக்காமல் இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து நிறுவனத்தின் மேலாளர் வினோத்குமார் குன்றக்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் முத்துக்குமார் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.