பணம் தர மறுத்ததால் ஆட்டோவை அடித்து நொறுக்கிய 3 பேர் மீது வழக்கு

பணம் தர மறுத்ததால் ஆட்டோவை அடித்து நொறுக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;

Update:2022-12-07 00:42 IST

ஆலங்குடி அருகே கீழப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் கலையரசன் (வயது 33). இவர், திருவரங்குளத்தில் ஆட்டோ நிறுத்தத்தில் இருந்து ஆட்டோ ஓட்டி வருகிறார். சம்பவத்தன்று இவர் ஆட்டோ நிறுத்தத்தில் ஆட்டோவுடன் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த தர்மன் மகன் ராஜலிங்கம், செல்லக்கண்ணு மகன் வீரா, பிரபா ஆகிய 3 பேரும் சேர்ந்து கலையரசனிடம் ரூ.500 கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது கலையரசன் பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜலிங்கம் உள்பட 3 பேரும் சேர்ந்து கலையரசன் ஆட்டோவை அடித்து நொறுக்கினர். இதுகுறித்து கலையரசன் ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, ராஜலிங்கம் உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்