அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

சங்கரன்கோவிலில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.;

Update:2023-08-26 02:11 IST

சங்கரன்கோவில்:

சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள், கடந்த ஆண்டு நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்கக்கோரி மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தனர். அதன் மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையொட்டி சங்கரன்கோவில் பஸ்நிலையம் முன்பு முன்னாள் அமைச்சரும், கழக மகளிர் அணி துணை செயலாளருமான வி.எம். ராஜலெட்சுமி தலைமையில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதில் மாவட்ட பொருளாளர் சண்முகையா, பொதுக்குழு உறுப்பினர் காளிராஜ், மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்