கிராமப்புற பெண்களுக்கு செல்போன் பழுது நீக்கும் இலவச பயிற்சி- 4-ந்தேதி தொடக்கம்

கிராமப்புற பெண்களுக்கு செல்போன் பழுது நீக்கும் இலவச பயிற்சி பெரம்பலூரில் 4-ந்தேதி தொடங்குகிறது.

Update: 2022-06-30 19:56 GMT

பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் ஷெரிப் காம்பிளக்சில் இயங்கி வரும் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 19 முதல் 45 வயதுக்குட்பட்ட கிராமப்புற பெண்களுக்கு செல்போன் பழுது நீக்குதல் மற்றும் சேவை தொழிற்பயிற்சி இலவசமாக வருகிற 4-ந்தேதி தொடங்கி 30 நாட்கள் வரை அளிக்கப்படவுள்ளது. அதற்கான நேர்முக தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) அந்த நிறுவனத்தில் காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது. நேர்முக தேர்வில் கலந்து கொள்ளும் பெண்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, 100 நாள் வேலை அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் பாஸ்போர்ட்டு அளவிலான புகைப்படம் 3 கொண்டு வர வேண்டும். பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்