காரைக்குடியில் 19 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து

காரைக்குடியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 19 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டன.

Update: 2022-06-18 17:16 GMT

காரைக்குடி, 

காரைக்குடியில் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பினை கவனத்தில் கொண்டு பள்ளி வாகனங்களை அதிகாரிகள் குழு முழுமையாக ஆய்வு செய்து தகுதி சான்று வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. பவநகர் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆய்வில் காரைக்குடி-தேவகோட்டை பகுதிகளைச் சேர்ந்த 148 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்த ஆய்வினை தேவகோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன், காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி, மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார், பள்ளி கல்வித்துறை அதிகாரி சண்முகநாதன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் கலையரசி மற்றும் அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்டனர்.

ஆய்வில் வாகனங்களின் தன்மை எந்திரங்களின் தற்போதைய நிலைப்பாடு, இயங்கும் திறன், பிளாட்பார்ம், வாகனத்தின் கதவு, அவசர வழிக்கான கதவு, இருக்கைகள் முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவிகள், விளக்குகள் பிரதிபலிப்பான்கள், ஓட்டுனர் உதவியாளர் உரிமங்கள் அவர்களது பணிக்காலம், வாகனத்தின் ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆய்வின் முடிவில் 19 வாகனங்களுக்கு தகுதிச் சான்று ரத்து செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்