தமிழகத்தில் 7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-09 02:20 GMT

கோப்புப்படம் 

சென்னை,

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து வாட்டி வதைத்து வருகிறது. கத்திரி வெயில் காலம் கடந்த 4-ந்தேதி தொடங்கிய பிறகு, மேலும் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இதற்கிடையில் கடந்த 6-ந்தேதியில் இருந்து தென் மாவட்டங்கள், உள்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்