பினராயி விஜயனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-24 03:55 GMT

சென்னை,

79-வது பிறந்தநாளை கொண்டாடும் கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன். இந்த ஆண்டு வெற்றி நிறைந்த ஆண்டாக அமையட்டும்." என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்