திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் நகர மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் தலைவர் டி.என்.முருகன் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் உமா மகேஸ்வரி குணா முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் கீதா வரவேற்றார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் வார்டு களில் உள்ள பொது பிரச்சினைகள் மற்றும் கோாிக்கைகளை தெரிவித்தனர். தொடர்ந்து நகர மன்ற தலைவர் டி.என்.முருகன் வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார். இதன் பின்னர் சமீபத்தில் உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகளுக்கு ஊதியம் அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.