நிலுவை கோரிக்கைகளை ஒரு மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் - வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தல்

தமிழக அரசு நிலுவை கோரிக்கைகளை ஒரு மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Update: 2023-08-06 12:38 GMT

சிவகங்கை,

வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் தலைவர் முருகையன், நிலுவை கோரிக்கைகளை தமிழக அரசு ஒரு மாத காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;-

"தமிழக அரசு சமீபத்தில் 110 வட்டாட்சியர்களுக்கு பதவி உயர்வு அளித்ததையும், அதைத் தொடர்ந்து அடுத்த 3 ஆண்டுகளில் 117 வட்டாட்சியர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதாக வருவாய்த்துறை அமைச்சரும், துறையின் செயலாளரும் வாக்குறுதி அளித்ததையும் ஏற்று, நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசுக்கு மேலும் ஒரு மாத காலம் அவகாசம் வழங்க மத்திய செயற்குழு முடிவு செய்துள்ளது.

அவ்வாறு இம்மாத இறுதிக்குள் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று முருகையன் தெரிவித்தார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்