ஒன்றும் இல்லாத பிரச்சனையை ஊர் சண்டையாக மாற்றிய பள்ளி மாணவர்கள்

பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் இரு கிராமங்களில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.;

Update:2023-01-13 12:41 IST

கள்ளக்குறிச்சி,

பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் இரு கிராமங்களில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் விளந்தை கிராமத்தில் இயங்கிவரும் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும், இரு வேறு கிராமங்களை சேர்ந்த மாணவர்களுக்கு இடையே, பிட் பேப்பர் வீசிய விவகாரத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.

பள்ளியில் இரு மாணவர்களும் அடித்துக் கொண்ட நிலையில், இந்த விவகாரம் அவர்களின் உறவினர்களுக்கு தெரிந்ததால், இரவு நேரத்தில் ஒன்று கூடினர். இதனால், பதற்றம் அதிகரித்ததை தொடர்ந்து காவல்துறையினர், சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

மேலும், மாணவர்கள் இரு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Full View

Tags:    

மேலும் செய்திகள்