கலெக்டர் ஆஷா அஜீத் திடீர் ஆய்வு
இளையான்குடி பேரூராட்சி பகுதிகளில் கலெக்டர் ஆஷா அஜீத் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.;
இளையான்குடி,
இளையான்குடி பேரூராட்சி பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதையொட்டி இளையான்குடி காமராஜர் சாலை சமுதாய கூடத்தில் கலைஞர் உரிமைத்தொகை வழங்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் உரிமைத்தொகை பெற வந்த பயனாளிகள், பதிவு செய்யும் முறை மற்றும் விவரங்களை கேட்டறிந்தார். ஆய்வின்போது இளையான்குடி தாசில்தார் கோபிநாத், பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத், மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தார்கள்.