செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் சந்தைப்படுத்தல் தொடர்பான 3 நாள் பயிற்சி - தமிழக அரசு தகவல்

7-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை 3 நாள் முழுநேர பயிற்சி நடைபெற உள்ளது.;

Update:2025-12-31 19:42 IST

சென்னை,

செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் சந்தைப்படுத்தல் தொடர்பான 3 நாள் பயிற்சி குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்-தமிழ்நாடு(EDII-TN), சென்னை, “செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தலின் (Digital Marketing) அடிப்படைகள்” என்ற தலைப்பில் 3 நாள் முழுநேர பயிற்சி நிகழ்ச்சியை 07.01.2026 முதல் 09.01.2026 வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை EDII-TN கட்டிட வளாகம், சென்னை – 600 032 யில் நடத்துகிறது.

இந்த பயிற்சி நிகழ்ச்சியின் நோக்கம், செயற்கை நுண்ணறிவின் அடிப்படைகள் மற்றும் அதன் நடைமுறைப் பயன்பாடுகளை அறிமுகப்படுத்தி, டிஜிட்டல் சந்தைப்படுத்தலில் (Digital Marketing) AI ஏற்படுத்தும் மாற்றங்களை விளக்குவதாகும். கருத்து விளக்கங்கள், நடைமுறைப் பயிற்சிகள் மற்றும் செயல் விளக்கங்களின் மூலம் பங்கேற்பாளர்கள் அனுபவமிக்க கற்றலைப் பெறுவர்.

பயிற்சியின் முக்கிய அம்சங்கள்:-

செயற்கை நுண்ணறிவு (AI): செயற்கை நுண்ணறிவு மற்றும் அதன் அன்றாட வாழ்க்கைப் பயன்பாடுகள்.

→ முக்கியக் கருத்துக்கள்: இயந்திரக் கற்றல் (Machine Learning), டீப் லேர்னிங் (Deep Learning), லார்ஜ் லாங்க்வேஜ் மாதிரிகள் (Large Language Models – LLMs) – உதாரணம்: ChatGPT.

→ சந்தைப்படுத்தலின் அடிப்படைகள்: வாடிக்கையாளர் நடத்தை, டிஜிட்டல் சந்தைப்படுத்தல் உத்திகள் மற்றும் பிரச்சார அடிப்படைகள்.

→ டிஜிட்டல் சந்தைப்படுத்தல் சேனல்கள்: தேடல் பொறிகள், சமூக ஊடகங்கள், மின்னஞ்சல் சந்தைப்படுத்தல், இணையதளங்கள் மற்றும் ஆன்லைன் விளம்பரம்.

→ SEO மற்றும் ஆராய்ச்சி கருவிகள்: SEMrush, Surfer SEO போன்ற கருவிகளின் அறிமுகம்.

→ செயற்கை நுண்ணறிவு கருவிகளின் நடைமுறைப் பயன்பாடு:

→ Jasper – சமூக ஊடகப் பதிவுகள் மற்றும் வலைப்பதிவுகளுக்கான AI உள்ளடக்க உருவாக்கம்.

→ Canva AI – கிராஃபிக் வடிவமைப்புக்கான செயற்கை நுண்ணறிவு கருவி.

→ SEMrush – பார்வையாளர் மற்றும் முக்கிய வார்த்தை ஆராய்ச்சி.

→ Sprinklr – சமூக ஊடகப் பகுப்பாய்வு மற்றும் ஈடுபாட்டு கண்காணிப்பு.

→ குழு அடிப்படையிலான செயல்பாடுகள்: AI உத்திகளைப் பயன்படுத்தி பிரச்சார முகவர் (Campaign Agent) உருவாக்கம்.

முக்கியக் கற்றல் பலன்கள்:-

→ செயற்கை நுண்ணறிவு (AI) வாடிக்கையாளர்களை துல்லியமாக இலக்காகக் கொள்ளும் திறன் மற்றும் தன்னியக்க உள்ளடக்க உருவாக்கம் மூலம் சந்தைப்படுத்தலில் புதுமையை உருவாக்குகிறது.

→ பல்வேறு AI நுட்பங்கள் (Techniques) மற்றும் மாதிரிகள் (Models) குறித்து அறிந்து அவற்றை திறம்படப் பயன்படுத்தும் திறன் பெறுவர்.

→ டிஜிட்டல் சந்தைப்படுத்தல் பல சேனல்களை உள்ளடக்கியது; ஒவ்வொன்றிற்கும் தனித்துவமான உத்திகள் மற்றும் கருவிகள் அவசியம்.

→ SEMrush மற்றும் Surfer SEO போன்ற கருவிகள் இணையத்தள தெரிவுநிலை மற்றும் பார்வையாளர் நுண்ணறிவை மேம்படுத்த முக்கிய பங்காற்றுகின்றன.

→ Jasper மற்றும் Canva AI போன்ற கருவிகள் படைப்பாற்றலை மேம்படுத்தி பிரச்சாரத்தின் தாக்கத்தையும் உயர்த்துகின்றன.

→ Sprinklr போன்ற தளங்கள் மூலம் கூட்டுப்பணி மற்றும் தரவு சார்ந்த முடிவெடுப்புகள் சிறந்த விளைவுகளைத் தருகின்றன.

தகுதியுடையவர்கள்:-

இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் (ஆண்/பெண் /திருநங்கைகள்/ திருநம்பிகள்/ தொழில்முனைவோர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச கணினி அறிவு வேண்டும். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்திலான தங்குமிடம் கிடைக்கும். தேவைப்படுவோர் முன் பதிவு செய்துகொள்ளலாம்

மேலும், இப்பயிற்சியின் கூடுதல் விவரங்களைப் பெறவும் மற்றும் முன்பதிவு செய்திடவும் www.editn.tn என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளவும். கைபேசி 9360221280 / 9840114680 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும். (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்