சீமைகருவேல மரங்கள் அகற்றும் பணியை கலெக்டர் ஆய்வு

கனிகனியான் கிராமத்தில் சீமைகருவேல மரங்கள் அகற்றும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.;

Update:2022-07-11 23:06 IST

வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட கனிகனியான் ஊராட்சியில் உள்ள சீமை கருவேல மரங்களை பொக்லைன் மூலம் அகற்றும் பணி நடந்துவருகிறது. இதனை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் பொக்லைன் எந்திரத்தில் அமர்ந்து, டிரைவர் மரங்களை வேரோடு முழுமையாக அகற்றுகிறாரா எனவும் பார்வையிட்டார். அனைத்து சீமை கருவேல மரங்களையும் முற்றிலுமாக வேரோடு அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின் போது வேலூர் சப்-கலெக்டர் பூங்கொடி, வேலூர் தாசில்தார் செந்தில், கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தயாளன், பானுமதி, ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்