வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 4 பேருக்கு ரூ.13 லட்சம் மானியம்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார்

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 4 பேருக்கு ரூ.13 லட்சம் மானியத்தை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார்.

Update: 2023-01-10 20:57 GMT


வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 4 பேருக்கு ரூ.13 லட்சம் மானியத்தை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார்.

மானிய நிதி

சக்தி பவானி மகளிர் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் சத்தியமங்கலம் காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கலந்துகொண்டு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 4 பேருக்கு ரூ.13 லட்சத்து 35 ஆயிரம் இணை மானிய நிதி வழங்கினார். மேலும், 20 பேருக்கு திறன் வளர்ப்பு பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது.

விழாவில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பேசும்போது, "தமிழ்நாடு அரசு மற்றும் உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் கிராம பகுதிகளில் வறுமை ஒழிப்பையும் கடந்து தொழில் நிறுவனங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த திட்டம் ஈரோடு மாவட்டத்தில் பவானி, பவானிசாகர், சென்னிமலை, சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய வட்டாரங்களில் 77 ஊராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது", என்றார்.

சந்தைக்கு அறிமுகம்

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட நற்பவி செக்கு எண்ணெய், வனமகள் அரப்பு தூள், வாழைப்பழம் சிப்ஸ், ஆவாரம்பூ டீ தூள், வனமகள் ராகி மாவு உள்பட மொத்தம் 26 வகை பொருட்களை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி சந்தைக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

மேலும், கொண்டப்பநாயக்கன்பாளையத்தில் ஆசனூர் லேண்டனா தொழில் குழுவுக்கு ரூ.16 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்ட உன்னிக்குச்சி பொடியாக்கி எந்திர சோதனை ஓட்டத்தை அவர் பார்வையிட்டார்.

இந்த விழாவில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அதிகாரி தாமோதரன், துணை இயக்குனர் மகாதேவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்