கல்லூரி மாணவர் சேர்க்கை: மாற்றுத்திறனாளிகள் என்றுதான் குறிப்பிட வேண்டும் - தமிழக அரசு உத்தரவு
கல்லூரி மாணவர் சேர்க்கையில் மாற்றுத்திறனாளிகள் என்றுதான் குறிப்பிட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.;
கோப்புப்படம்
சென்னை,
கல்லூரி, பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கையின்போது காது கேளாதவர்கள், வாய் பேச முடியாதவர்கள் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இனிமேல் அந்த வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசிதழும் வெளியிடப்பட்டு இருக்கிறது.
அதில், காதுகேளாதவர்கள், வாய் பேச முடியாதவர்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வார்த்தைகள் மாணவர் சேர்க்கையில் பயன்படுத்தக்கூடாது. அதற்கு பதிலாக மாற்றுத்திறனாளிகள் என்ற வார்த்தையை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதன் மூலமாக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின் போதே இதுபோன்ற பிரிவுகள் கேள்விகளாக கேட்கப்படுவது தவிர்க்கப்படும் என்று சொல்லபடுகிறது.
மாணவர் சேர்க்கை மட்டுமல்லாது, தேர்வுக்கான சலுகைகள் கோரும்போது, மாற்றுத்திறனாளிகள் என்று குறிப்பிட்டே விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று இதன் மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.