கவர்னரை கண்டித்து கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் கவர்னரை கண்டித்து கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2023-01-10 21:27 IST

தமிழ்நாடு அரசின் 2023-ம் ஆண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்ட உரையில் தமிழக அரசின் கொள்கைகளை படிக்க தவிர்த்து பேசிய கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து திருவண்ணாமலை அரசு கலைஞர் கலைக்கல்லூரி மாணவர் சங்கத்தினர் கல்லூரியின் நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மாணவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். இதனால் கல்லூரி முன்பு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்