காவல்நிலைய மரணங்கள், துன்புறுத்தலுக்கு ஆளானவர்களுக்கான இழப்பீடு தொகை அதிகரிப்பு - தமிழக அரசு அறிவிப்பு

காவல்நிலைய மரணங்கள் தொடர்பான இழப்பீட்டு தொகையை உயர்த்தி அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2023-03-11 09:55 GMT

சென்னை,

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில், காவல்நிலைய மரணங்கள், துப்பாக்கிச்சூடு மரணங்கள், காவலர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களுகள், காவலர்களால் நிரந்தர உடல் முடக்கம் ஏற்பட்டவர்கள் ஆகியோருக்கான இழப்பீடு 5 லட்சம் ரூபாயில் இருந்து 7.5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதே போல், காவலர்களால் உடல் துன்புறுத்தலுக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டால் வழங்கப்படும் இழப்பீட்டு தொகை, 1 லட்சம் ரூபாயில் இருந்து 3 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்